பஜாஜ் ஆட்டோ: 2-வது காலாண்டு லாபம் 53% உயர்வு!

வலுவான விற்பனையால், செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு 53% அதிகரித்து ரூ.2,122 கோடியாக உள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: ஏற்றுமதி சந்தைகளில் ஏற்பட்ட வலுவான விற்பனையால், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம், ஆண்டுக்கு ஆண்டு 53% அதிகரித்து ரூ.2,122 கோடியாக உள்ளதாக பஜாஜ் ஆட்டோ இன்று தெரிவித்துள்ளது.

புனேவை தளமாகக் கொண்ட பஜாஜ் ஆட்டோ, கடந்த ஆண்டு செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.1,385 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக இருப்பதாக தெரிவித்தது.

செப்டம்பர் வரையான காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் ரூ.15,735 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.13,247 கோடியாக இருந்தது என்றது.

2025 செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 12,94,120 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 12,21,504 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 6 சதவிகிதம் அதிகமாகும். இந்த காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5 சதவிகிதம் குறைந்து 7,40,793 லட்சம் வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி அளவு 24 சதவிகிதம் அதிகரித்து 7,40,793 லட்சம் வாகனங்களாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் அதன் 3 சக்கர வண்டிகளும் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

சர்வதேச வணிகத்தைப் பொறுத்தவரை, இது ஒரு சிறந்த காலாண்டு என்றார் ராகேஷ். வருவாயைப் பொறுத்தவரை, இது எங்களுக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச காலாண்டாகும்.

இதையும் படிக்க: கல்யாண் ஜுவல்லர்ஸ் 2வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

Bajaj Auto on said its consolidated profit after tax increased 53 per cent year-on-year to Rs 2,122 crore in the September quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com