அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

டிரென்ட் 2-வது காலாண்டு லாபம் 11% உயர்வு!

டிரென்ட் லிமிடெட் 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11.44% அதிகரித்து ரூ.373.42 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 நவம்பர் 2025, 3:35 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: டாடா குழும சில்லறை விற்பனை நிறுவனமான டிரென்ட் லிமிடெட் செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11.44% அதிகரித்து ரூ.373.42 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

டிரென்ட் கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.335.06 கோடியாக ஈட்டியிருப்பதாக தெரிவித்தது.

செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் ஒருங்கிணைந்த வருவாய் 15.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,817.68 கோடியாக உள்ளதாக தெரிவித்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.4,156.67 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.

டிரென்ட்டின் மொத்த செலவு செப்டம்பர் வரையான காலாண்டில் 16.7% அதிகரித்து ரூ.4,367.15 கோடியாக உள்ள நிலையில் செப்டம்பர் வரையான காலாண்டில் மற்ற வருமானமங்களுடன் அதன் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 15.3% உயர்ந்து ரூ.4,845.23 கோடியாக உள்ளது.

நிதியாண்டு 2026 முதல் பாதியில், டிரெண்டின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம் 17 சதவிகிதம் உயர்ந்து ரூ.9,769.30 கோடியாக உள்ளது.

வெஸ்ட்சைட், ஜூடியோ மற்றும் ஸ்டார் என்ற பிராண்ட் பெயர்களில் டிரென்ட் தனது சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் டிரெண்டின் பங்குகள் இன்று 1.15% வரை சரிந்து ரூ.4,624.85 ஆக வர்த்தகமானது.

summary

Tata group retail firm Trent Ltd reported an 11.44 per cent increase in consolidated net profit to Rs 373.42 crore for the second quarter ended September 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.