

புதுதில்லி: புதிய ஆர்டர்கள் பின்னணியில், செப்டம்பர் வரையான காலாண்டில் எஸ்பிசி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 2 மடங்கு அதிகரித்து ரூ.11.36 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எஸ்பிசி எக்ஸ்போர்ட்ஸ், வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.5.36 கோடியாக உள்ளதாக தெரிவித்தது. 2-வது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 28.49% அதிகரித்து ரூ.84.70 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.65.98 கோடியாக இருந்தது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், வரிக்குப் பிந்தைய லாபம் ஆண்டுக்கு ஆண்டு 38.76% உயர்ந்து ரூ.14.82 கோடியாக உள்ளது.
2025ல் பல பணி ஆர்டர்கள் மற்றும் ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இவைகளில் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான ஆடை விநியோகம் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான ஐடி ஆதரவு சேவைகளில் கவனம் செலுத்தும் நிலையில் நிறுவனத்தின் ஆர்டர் புக் ரூ.300 கோடியாக வளர்ந்துள்ளது.
இதையும் படிக்க: போனஸ் வெளியீடு குறித்து பரிசீலிக்கும் A1 லிமிடெட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.