

புதுதில்லி: நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டை விட 86% அதிகரித்து ரூ.328 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.176 கோடியாக இருந்தது.
செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் ரூ.2,331 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.1,988 கோடியாக இருந்தது என்று ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் தெரிவித்துள்ளது.
இன்றைய மும்பை பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.69% குறைந்து ரூ.985.25 ஆக இருந்தது.
இதையும் படிக்க: ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் Q2 நிகர லாபம் ரூ.230 கோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.