

புதுதில்லி: செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், ஜேபி கெமிக்கல்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் ஆண்டுக்கு ஆண்டு நிகர லாபம் 19% அதிகரித்து ரூ.208 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ.175 கோடி நிகர லாபம் ஈட்டியது. நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய், மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் ரூ.1,085 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,001 கோடியாக இருந்தது.
உள்நாட்டு வணிகம் 2-வது காலாண்டில் ரூ.644 கோடி வருவாயைப் பதிவு செய்த நிலையில், கடந்த ஆண்டு இது ரூ.588 கோடியாக இருந்தது. அதே வேளையில் சர்வதேச வணிக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்து ரூ.441 கோடியாக உள்ளது என்றது.
இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 0.73% உயர்ந்து ரூ.1,826.65 ஆக நிறவடைந்தது.
இதையும் படிக்க: பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.