Stock market
ANI

4-ம் நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...
Published on

பங்குச் சந்தைகள் 4-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,525.89 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 306.73 புள்ளிகள் அதிகரித்து 84,773.24 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 95.50 புள்ளிகள் உயர்ந்து 25,971.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறைகளில், உலோகம், ரியல் எஸ்டேட், மீடியா 0.5 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன, அதே நேரத்தில் ஐடி, எஃப்எம்சிஜி தலா 0.3 சதவீதம் சரிந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் நிலையாக வர்த்தகமாகின்றன.

பில்லியன் பிரைன்ஸ் கேரேஜ் வென்ச்சர்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டேட்டா பேட்டர்ன்ஸ் மற்றும் பிஎஸ்இ லிமிடெட் ஆகியவை சென்செக்ஸில் ஏற்றத்தில் உள்ளன.

அதேநேரத்தில் ஸ்ரீராம் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, எட்டர்னல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

Summary

Stock Market Updates: Sensex up 300 pts, Nifty above 25,950

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com