

புதுதில்லி: இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில், நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 21% அதிகரித்து ரூ.4.71 கோடியாக உள்ளதையடுத்து பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் (குஜராத்) லிமிடெட் பங்குகள் 5% உயர்ந்து ரூ.165.50 என்ற மேல் உச்ச வரம்பை எட்டியது.
பிஎஸ்இ-யில் அதன் பங்குகள் ரூ.165.50க்கு வர்த்தகமானது. இது அதன் முந்தைய இறுதி வர்த்தக நிலையிலிருந்து 5% அதிகமாகும். இருப்பினும், பங்குகள் 2.06% உயர்ந்து ரூ.160.90க்கு முடிவடைந்தன. கடந்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் பங்குகள் 50% அதிகரித்துள்ளது.
2025 செப்டம்பர் உடன் முடிவடைந்த 3 மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4.71 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3.89 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.70.91 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.55.75 கோடியிலிருந்து இது 27.2% அதிகம்.
வலுவான ஆர்டர் வரவுகள் மற்றும் திறமையான திட்ட மேலாண்மை ஒட்டுமொத்த செயல்திறனை ஆதரித்துள்ளதாக பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் நிர்வாக இயக்குநர் பத்மராஜ் பத்மநாபன் பிள்ளை தெரிவித்தார்.
2026 நிதியாண்டின் முதல் பாதியில், அதன் மொத்த வருமானம் ரூ.112.46 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டை விட 37.57% அதிகமாகும். அதே நேரத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 27.29% அதிகரித்து ரூ.7.33 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்திய டாடா பவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.