

மும்பை: பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறையான உணர்வை அடுத்து, இன்றை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61 ஆக முடிவடைந்தது.
அன்னிய நிதி வரத்து அதிகரிப்பு, டாலரில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பை கீழ்நோக்கி இழுத்து சென்றதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ.88.67 ஆக தொடங்கி டாலருக்கு நிகரான ரூ.88.69 மற்றும் ரூ.88.58 என்ற இறுக்கமான வரம்பில் வர்த்தகமாகி, இறுதியில் முந்தைய நிலையை விட 2 காசுகள் குறைந்து ரூ.88.61 ஆக நிலைபெற்றது.
அதே வேளையில், இறக்குமதி அதிகரிப்பதும், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை விரிவடைவது குறித்து முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனிடையில், இந்த வார இறுதியில் வெளியிடப்படும் முன்மொழியப்பட்ட இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தையும், உள்நாட்டு பிஎம்ஐ (PMI) தரவுகளையும் வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 88.59 ஆக இருந்தது.
இதையும் படிக்க: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு: சென்செக்ஸ் 277 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 0.40% வீழ்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.