

மும்பை: பலவீனமான உலக சந்தைகளின் போக்குகளால் இன்றைய வர்த்தகத்தில் ஐடி, உலோகம் மற்றும் மூலதனப் பங்குகளை முதலீட்டாளர்கள் வெகுவாக லாபம் ஈட்டியதன் காரணமாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தனது ஆறு நாள் வெற்றித் தொடரை முறியடித்துக் கொண்டு பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 277.93 புள்ளிகள் சரிந்ததும் அதே வேளையில் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்குக் கீழே சென்று முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 392.59 புள்ளிகள் சரிந்து 84,558.36 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 277.93 புள்ளிகள் சரிந்து 84,673.02 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 103.40 புள்ளிகள் சரிந்து 25,910.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எடர்னல், அதானி போர்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சரிந்து முடிந்த நிலையில் பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
டிசம்பரில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகள் குறைந்துள்ள நிலையில் இது முதலீட்டாளர்களின் உணர்வைப் பாதித்தது. அதே வேளையில் வலுவான டாலருக்கு மத்தியில் ஐடி, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் குறியீடும், ஐரோப்பிய சந்தைகளும் சரிந்தன. நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க சந்தைகளும் சரிந்து முடிவடைந்தன.
இதனிடையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல், இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் நியாயமானதும் அதே வேளையில் சமநிலையானதும் என்றார். விரைவில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து நீங்கள் ஒரு நல்ல செய்தி கேட்பீர்கள்.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.442.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.1,465.86 கோடி மதிப்புள்ள பங்குகளையும் வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.40% குறைந்து 63.94 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: எம்&எம் விற்பனை 26% உயர்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.