

புது தில்லி: இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் (எம்&எம்) மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபர் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,20,142-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 95,449 வாகனங்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பியது.
கடந்த 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 54,504-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 71,624-ஆக உயர்ந்துள்ளது. இது 31 சதவீத உயர்வாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன டிராக்டர்களின் மொத்த விற்பனை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி) 13 சதவீதம் உயர்ந்து 73,660-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 65,453-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.