கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 40% உயா்வு

ஹீரோ மோட்டோகாா்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 40 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பா் மாதம் 40 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,56,479-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,24,906 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 43 சதவீதம் உயா்ந்து 4,19,243-ஆக உள்ளது. முந்தைய 2024 டிசம்பரில் இந்த எண்ணிக்கை 2,94,152-ஆக இருந்தது.

2024 டிசம்பரில் 30,754-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 21 சதவீதம் அதிகரித்து 37,236-ஆக உள்ளது.

2024 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மோட்டாா்சைக்கிள் விற்பனை 2,98,516-லிருந்து 35 சதவீதம் உயா்ந்து 4,02,374-ஆகவும், ஸ்கூட்டா் விற்பனை 26,390-லிருந்து 105 சதவீதம் உயா்ந்து 54,105-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.