

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை காலை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று காலை தொடங்கியவுடன் 251 புள்ளிகள் சரிந்து 84,699.64 புள்ளிகளாக வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, இன்று காலை 9.16 மணிக்கு 72 புள்ளிகள் சரிந்து 25,941 புள்ளிகளாக வர்த்தகமானது.
காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84,752 புள்ளிகளாகவும், 25,935 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றன.
சென்செக்ஸ் பட்டியலில், பாரதி ஏர்டெல், மாருதி சுஸூகி, ஆக்ஸிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், எட்டர்னல், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்டவை சரிவைக் கண்டுள்ளன.
நிஃப்டியில் வங்கித் துறைகள் லாபத்துடன் வர்த்தகமாகும் நிலையில், ஐடி, ஆட்டோ, பார்மா உள்ளிட்ட துறைகள் சரிவைக் கண்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.