

ஆடம்பர கார் நிறுவனமான ஆடி சிக்னேச்சர் வரிசையில் க்யூ3, க்யூ 3 ஸ்போர்ட்பேக் மற்றும் க்யூ 5 ஆகிய லிமிடெட் எடிஷன் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆடி காரின் வெளிப்புற மற்றும் உட்புறம் புதுவித அலங்காரங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன. க்யூ3 கார்களுக்கு 18 அங்குல சக்கரங்களும், க்யூ 5 காருக்கு 19 அங்குல சக்கரங்களும் வழங்கப்படுகின்றன.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
க்யூ 3. க்யூ 3 ஸ்போர்ட்பேக் ஆகியவற்றில் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேசமயம் க்யூ 5 269 பிஎஸ் பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
மேலும், இதில் பார்க் அசிஸ்ட் பிளஸ் மற்றும் பின்புற பயணிகளுக்கு கூடுதல் சார்ஜிங் போர்ட்கள் உள்ளன. டூயல் 4ன் கிளைமேட் கண்ட்ரோல், 30 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 10.1 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போ டெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
க்யூ-5ல் 19 அங்குல அலாய் வீல்கள், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 30 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூப், 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த எஸ்யுவி சிக்னேச்சர் பச்சை, கிளசியர் வெள்ளை, மன்ஹாட்டன் கிரே, மைதோஸ் கருப்பு மற்றும் நவர்ரா நீலம் ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது.
மேலும் ஓட்டுநர் பெடலுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கவர், பார்க் அசிஸ்ட் வசதி, கேபினுக்கு நல்ல வாசனை வழங்க டிஸ்பென்சர் என கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.