

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் கடும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,347.40 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 372.97 புள்ளிகள் குறைந்து 85,259.71 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108.20 புள்ளிகள் குறைந்து 26,083.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி, எட்டர்னல், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
நிஃப்டி ஆட்டோ, மெட்டல், பொதுத்துறை வங்கி உள்ளிட்ட பெரும்பாலான துறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ஆசிய பங்குச்சந்தைகளும் பெரும்பாலாக இன்று சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று(வியாழக்கிழமை) சரிவில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.