14 மாதங்களாக சரிவை நோக்கி ஏற்றுமதி: கிரிசில்

ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 11.8% சரிந்து அக்டோபரில் இது 34.38 பில்லியன் டாலர்களாக இருப்பதாக கிரிசில் தெரிவித்தது.
14 மாதங்களாக சரிவை நோக்கி ஏற்றுமதி: கிரிசில்
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 11.8% சரிந்து அக்டோபரில் இது 34.38 பில்லியன் டாலர்களாக இருப்பதாக கிரிசில் இன்று தெரிவித்தது.

இந்த நிதியாண்டின் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமெரிக்க 50% வரி அதிகரித்ததை தொடர்ந்து, இது நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே வேளையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்றுமதி குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பெட்ரோலிய பொருட்கள், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் மற்றும் முக்கிய துறைகளில் ஏற்றுமதியில் சரிவு காணப்பட்டது.

செப்டம்பரில் 15.1% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி அக்டோபரில் ஆண்டுக்கு ஆண்டு 10.4% குறைந்துள்ளது. அதேபோல், முக்கிய ஏற்றுமதிகள் 2025 செப்டம்பரில் 6.1% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது 10.2% குறைந்துள்ளது.

அமெரிக்காவிற்கான பொருட்கள் ஏற்றுமதி அக்டோபரில் ஆண்டுக்கு ஆண்டு 8.6% குறைந்து 6.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது செப்டம்பரில் 11.9% சரிவிலிருந்து முன்னேற்றம் என்றது அறிக்கை.

நவம்பர் 16 தேதியன்று அமெரிக்கா 254 உணவுப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பதாக அறிவித்தது. இது தேயிலை, மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட சில விவசாய பொருட்களுக்கு ஏற்றுமதி செய்ய அறிய நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

செப்டம்பரில் 10.9% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா அல்லாத பிற சந்தைகளுக்கான ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 12.5% குறைந்துள்ளது.

இதையும் படிக்க: கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டும் ஆக்சிஸ் வங்கி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com