

பங்குச் சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,008.93 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது.
பின்னர் மீண்டும் சரிந்த நிலையில் தற்போது சென்செக்ஸ் 57.48 புள்ளிகள் குறைந்து 84,846.52 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. எனினும் பங்குச்சந்தை மீண்டெழுந்து நேர்மறை வர்த்தகத்தில் முடியும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.70 புள்ளிகள் குறைந்து 26,083.95 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறைகளில் உலோகம், ரியல் எஸ்டேட் தலா 1% உயர்ந்தன. அதே நேரத்தில் ஐடி, தொலைத்தொடர்பு, மீடியா, எஃப்எம்சிஜி தலா 0.5% வரை சரிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் ஓரளவு லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஜியோ பைனான்சியல் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபத்தைப் பெற்ற நிறுவனங்கள்.
டாடா கன்ஸ்யூமர், நெஸ்லே, அதானி என்டர்பிரைசஸ், டிரென்ட் மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.