

மகிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ, மஹேந்திரா பி.இ.6 ஆகிய மின்சார கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அந்நிறுவனம் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த மின்சார வாகனங்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி இரு இஎஸ்யுவி கார்களுக்கும் ரூ. 1.55 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது.
என்னென்ன சலுகைகள்?
• ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 7.2 கிலோவாட் சார்ஜர்
• ரூ.30 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள்
• கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம்
• எக்ஸ்சேன்ச் அல்லது லாயட்டி போனஸ் ரூ.30 ஆயிரம் வரை
• பொது இடங்களில் ரூ.20 ஆயிரம் மதிப்பில் இலவச சார்ஜிங் வசதி
குறிப்பிட்ட டீலர்கள் தரப்பில் மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். அதிலும் 5 ஆயிரம் முன்பதிவுகளுக்கு மட்டுமே. டிசம்பர் 20 வரை முன்பதிவு செய்யும் கார்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்..
எக்ஸ்இவி 9இ, மகிந்திரா பி.இ.6 ஆகிய இரண்டு கார்களிலும் ஏஆர் அடிப்படையிலான ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஒளிரும் கண்ணாடி ரூப், காற்றோட்டமான முன் இருக்கைகள், காலநிலைக்கு ஏற்ப ஏசி கட்டுப்பாடு, செல்ஃபி கேமரா மற்றும் 16 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
விலை என்ன?
பி.இ.6 ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ.18.9 லட்சம். டாப் வேரியண்ட் ரூ.26.9 லட்சம்.
எக்ஸ்இவி 9இ ஆரம்ப ஷோரூம் விலை சுமார் ரூ. 21.9 லட்சம், டாப் வேரியண்ட் சுமார் ரூ. 30.5 லட்சம்.
இது முழுமையாக சார்ஜ் செய்தால் வேரியண்ட்களுக்கு ஏற்ப பயணிக்கும் கி.மீ தூரம் மாறுபடும்.
இதையும் படிக்க: தவெகவில் செங்கோட்டையனுக்கு பதவியை அறிவித்தார் விஜய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.