ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

சுகாதாரத் துறைக்கான தீர்வுகள் வழங்குநரான ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்குகள், அறிமுக நாளின் தொடக்கத்தில் சமமாக வர்த்தகமான நிலையில் இன்று 4.55% சரிந்து முடிவடைந்தது.
ஃபேப்டெக் டெக்னாலஜி
ஃபேப்டெக் டெக்னாலஜி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: மருந்துகள், பயோடெக் மற்றும் சுகாதாரத் துறைக்கான தீர்வுகள் வழங்குநரான ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்குகள், அறிமுக நாளின் தொடக்கத்தில் சமமாக வர்த்தகமான நிலையில் இன்று 4.55% சரிந்து முடிவடைந்தது.

பிஎஸ்இ-யில் பங்கு வெளியீட்டு விலையான ரூ.191 க்கு இணையாக பட்டியலிடப்பட்டது. அதுவே பகல் நேர வர்த்தகத்தில் 5% சரிந்து ரூ.181.45 ஆக இருந்தது. முடிவில் ரூ.182.30 ஆக முடிந்து 4.55% சரிந்தது.

என்எஸ்இ-யில், பங்கு வெளியீட்டு விலையிலிருந்து 0.52% அதிகரித்து ரூ.192 ஆக வர்த்தகம் தொடங்கியது. பிறகு 4.50% சரிந்து ரூ.182.40 ஆக முடிவடைந்தது. இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.810.34 கோடியாக உள்ளது.

ரூ.230 கோடி மதிப்புள்ள ஃபேப்டெக் ஐபிஓ பங்கு ஒன்றுக்கு ரூ.181 முதல் ரூ.191ஆக விலை வரம்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com