
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான நோர்டு 6 விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஒன்பிளஸ் நோர்டு 5 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை தயாரிப்பாக நோர்டு 6 இருக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய பயனர்களை ஈர்க்கும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் புதிதாக நோர்டு 6 என்ற ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் 1.5K அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இருக்கும் வகையில் 165Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டது
ஏராளமான செயலிகளை ஒரே நேரத்தில் இயக்கும் வகையில் 16GB உள் நினைவகத்துடன் 1TB நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது.
7,800mAh பேட்டரி திறன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 120W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்டு 5 ஸ்மார்ட்போன் 6.83 அங்கும அமோலிட் திரை கொண்டதாக இருந்தது. ஸ்நாப்டிராகன் 8எஸ் மூன்றாம் தலைமுறை சிப்செட் கொண்டது.
ஒன்பிளஸ் நோர்டு 6 அறிமுகம் குறித்து ஒன்பிளஸ் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், ஒன்பிளஸ் 15 உடன் ஒன்பிளஸ் நோர்டு 6 அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | தங்கம் விலை ரூ. 1 லட்சம் தொடும்? குறைய வாய்ப்பு உண்டா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.