லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

நிதியாண்டின் 2-வது காலாண்டில், வீட்டுத் தேவை சிறப்பாக இருந்ததால், லோதா டெவலப்பர்ஸ் விற்பனை முன்பதிவுகள் 7% அதிகரித்து ரூ.4,570 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
லோதா டெவலப்பர்ஸ்
லோதா டெவலப்பர்ஸ்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில், வீட்டுத் தேவை சிறப்பாக இருந்ததால், ரியல் எஸ்டேட் நிறுவனமான லோதா டெவலப்பர்ஸ் லிமிடெட்டின் வீடுகள் விற்பனை முன்பதிவுகள் 7% அதிகரித்து ரூ.4,570 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் அதன் விற்பனை முன்பதிவுகள் ரூ.4,290 கோடியாக இருந்தன. இதற்கிடையில் 2025-26 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான செயல்பாட்டை நிறுவனம் நேற்றை முன்தினம் வெளியிட்டது.

காலாண்டில் வரையறுக்கப்பட்ட துவக்கங்கள் இருந்தபோதிலும், 2026 நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.4,570 கோடி என்ற விற்பனை இலக்கை நாங்கள் அடைந்துள்ளோம். இது ஆண்டுக்கு ஆண்டு 7% வளர்ச்சியாகும்.

நாங்கள் முன் விற்பனையை அடைந்தோம்.

இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நிறுவனத்தின் விற்பனை முன்பதிவுகள் 8% அதிகரித்து ரூ.9,020 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.8,320 கோடியாக இருந்தது.

மொத்த வீட்டுத் தேவையில் சிறிது மந்தநிலை இருந்தபோதிலும், பட்டியலிடப்பட்ட ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் இந்த ஆண்டு இதுவரை சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான லோதா டெவலப்பர்ஸ், மும்பை, புனே மற்றும் பெங்களூருவின் குடியிருப்பு சந்தைகளில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.88.69 ஆக நிறைவு!

Summary

Realty firm Lodha Developers Ltd's sales bookings rose 7 per cent to Rs 4,570 crore in the second quarter of this fiscal on better housing demand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com