பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

பணமோசடி வழக்கில் அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அனில் அம்பானி
அனில் அம்பானி
Published on
Updated on
1 min read

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிர்வாகியை பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாகி ஒருவரை அமலாக்க இயக்குநரகம் இன்று காலை (சனிக்கிழமை) கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவரும் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவன இயக்குநருமான அனில் அம்பானியின் நிறுவனங்களில், யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூர் விதிகளை மீறி முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்யப்பட்ட பணத்தை கொஞ்சம்கொஞ்சமாக கையாடல் செய்ததாக இருவர் மீது சிபிஐ ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருக்கிறது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் பவர் நிறுவன தலைமை நிதி அதிகாரி அசோக் பால், பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் வெள்ளிக்கிழமை காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக அனில் அம்பானி குழும நிறுவனங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Enforcement Directorate (ED) has arrested an executive of businessman Anil Ambani's Reliance Group under the anti-money laundering law, official sources said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com