
மும்பை: உலகளாவிய சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ், இந்தியாவில் ஆண்களுக்கான அழகுசாதனப் பொருட்களும், அதே வேளயில் தாய் மற்றும் குழந்தையின் பராமரிப்பு பொருட்களின் வரம்பை தொடர்ந்து வலுப்படுத்த உள்ளதாகவும், உள்ளூர் சந்தையில் உலகளாவிய பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தை வேகமாக வளர்ந்து வருவதாகவும், பிரீமியம் பிரிவில் நிறுவனம் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், நுகர்வோரைக் கருத்தில் கொண்டு, ரீசார்ஜ் செய்யக்கூடிய சருமப் பாதுகாப்பு தயாரிப்பான ஒன்பிளேடை வெளியிட பிலிப்ஸ் இந்தியா முடிவு செய்துள்ளது.
புதிய கண்டுபிடிப்புகளுடன் ஆண்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், அதே வேளையில் தாய் மற்றும் குழந்தையின் பராமரிப்பு பொருட்கள் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பிற சந்தைகளில் உள்ள எங்கள் உலகளாவிய பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவோம் என்றார் பிலிப்ஸ் பெர்சனல் ஹெல்த் இந்தியா துணைக் கண்டத்தின் தலைவரான ஸ்மித் சுக்லா.
வாய்வழி ஆரோக்கியத்தில் பிலிப்ஸ் மிகப்பெரிய உலகளாவிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது என்றும், தற்போது அதை இந்தியாவிற்குக் கொண்டுவருவது குறித்து யோசித்து வருவதாகவும், அழகுபடுத்தல் பிரிவில், பிலிப்ஸ் இந்தியா 50 முதல் 60 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது என்றார்.
இதையும் படிக்க: ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.