சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல்...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

சென்செக்ஸ்: 30 முன்னணி பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 173.77 புள்ளிகள் (0.21 சதவீதம்) சரிந்து 82,327.05இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் 457.68 புள்ளிகள் (0.55 சதவீதம்) சரிந்து 82,043.14 என்ற குறைந்த அளவை எட்டியது. எனினும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளில் காணப்பட்ட உறுதி வர்த்தகத்தின் இரண்டாம் பாதியில் சரிவைக் கட்டுப்படுத்த உதவியது.

சென்செக்ஸ் பட்டியலில், டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக 2.67 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர்கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவையும் சரிவைக் கண்டன. அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை உயர்வைக் கண்டன.

நிஃப்டி: 50பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 58 புள்ளிகள் (0.23 சதவீதம்) சரிந்து 25,227.35இல் நிறைவடைந்தது. இதில் 30 பங்குகள் சரிவைக் கண்டன; 19 பங்குகள் உயர்ந்தன; ஒரு பங்கு மாற்றமின்றி இருந்தது.

பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.459.20 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com