
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,049.16 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.35 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 349.73 புள்ளிகள் குறைந்து 82,151.09 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 104.60 புள்ளிகள் குறைந்து 25,180.75 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% சரிந்தன. உலோகம், மின்சாரம், ஐடி என அனைத்து துறை குறியீடுகளும் தலா 1% சரிந்து வர்த்தகமாகின்றன.
ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், அதானி என்ட், இன்ஃபோசிஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவடைந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.