ஹாத்வே நிகர லாபம் 46% சரிவு!
ஹாத்வே, செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 46.16% சரிந்து ரூ.7.4 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

hathway

hathway
புதுதில்லி: கேபிள் மற்றும் இணைய சேவைகளை வழங்கும் ஹாத்வே லிமிடெட், செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 46.16% சரிந்து ரூ.7.4 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்குச் சொந்தமான ஹாத்வே நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் அதன் நிகர லாபம் ரூ.13.74 கோடியாக இருந்தது.
இருப்பினும், செப்டம்பர் காலாண்டில் அதன் மொத்த வருவாய் 12 சதவிகிதம் அதிகரித்து ரூ.959.05 கோடியாக உள்ளது. கடந்த வருடம், இதே காலத்தில் அது ரூ.855.56 கோடியாக இருந்தது. கேபிள் டிவி வணிகத்திலிருந்து அதன் வருவாய் ரூ.802.64 கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டில் இணைய சேவைகளிலிருந்து அதன் வருவாய் ரூ.140.11 கோடியாக இருந்தது. அதே வேளையில் செப்டம்பர் காலாண்டில் அதன் மொத்த செலவுகள் ரூ.954.40 கோடியாக இருந்தது. ஹாத்வேயின் மொத்த வருமானமும் மற்ற வருமானமும் இதில் அடங்கும். இதுவே செப்டம்பர் வரையான காலாண்டில் 11.9 சதவிகிதம் அதிகரித்து ரூ.964.93 கோடியாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஹாத்வேயின் பங்குகள் பிஎஸ்இ-யில் ரூ.109.05 ஆக முடிந்தது. இது அதன் முந்தைய முடிவை விட 0.6% அதிகமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...