
மும்பை: பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறையான போக்கும், ஒரே இரவில் அமெரிக்க டாலர் உயர்ந்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு அதன் வரலாறு காணாத அளவுக்கு 12 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக முடிவடைந்தது.
உலகளாவிய அளவில் அந்நிய நிதி வெளியேற்றமானது முதலீட்டாளர்களின் உணர்வை வெகுவாக பாதித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு, ரிசர்வ் வங்கியின் தலையீடால், இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவானது கணிசமாக தடுக்கப்பட்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், ரூபாய் மதிப்பு ரூ.88.73 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.88.81 முதல் ரூ.88.73 என்ற வரம்பில் வர்த்தகமானது. முடிவில் 12 காசுகள் சரிந்து ரூ.88.80ஆக நிறைவடைந்தது.
செப்டம்பர் 30ஆம் தேதியன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவாக ரூ.88.80 முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றத்தால் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.