
புதுதில்லி: ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 4.87% உயர்ந்து ரூ.50.99 கோடியாக உள்ளது. அதன் கொள்முதல் செலவுகள் அதிகரித்த போதிலும் வருவாய் அதிகரித்தது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.48.62 கோடியாக இருந்த போதிலும், அதன் மொத்த வருவாய் ரூ.1,112.5 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், செலவுகள் ரூ.957.49 கோடியாக இருந்தது.
பாதகமான வானிலை மற்றும் கொள்முதலில் விலை உயர்வு உள்ளிட்ட சவால்கள் இருந்தபோதிலும், ஆண்டுக்கு ஆண்டு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 9% உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.
காலாண்டில் கொள்முதல் அளவுகள் நாள் ஒன்றுக்கு 2.1 சதவிகிதம் குறைந்து 16.1 லட்சம் லிட்டராக இருந்தது. அதே நேரத்தில் சராசரி பால் கொள்முதல் விலை 6.3% அதிகரித்து லிட்டருக்கு ரூ.42.8 ஆக இருந்தது.
பால் விற்பனை அளவு நாள் ஒன்றுக்கு 1.1 சதவிகிதம் அதிகரித்து 12.1 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ள நிலையில், அதன் சராசரி விற்பனை விலை 4.5% அதிகரித்து, லிட்டருக்கு ஒன்றுக்கு ரூ.57 ஆக உயர்ந்தது என்றது.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் வருவாய் 14.8% அதிகரித்து ரூ.341.7 கோடியாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 31.4% பங்களிப்பு.
வருவாயில் 34% உயர்ந்து ரூ.58.1 கோடியாக இருந்த நிலையில், வரிக்கு முந்தைய லாபம் 80% அதிகரித்து ரூ.5.4 கோடியாக உள்ளது.
இதையும் படிக்க: டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.