
புதுதில்லி: செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் சுமார் 27% குறைந்து ரூ.183.21 கோடியாக உள்ளதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் இன்று தெரிவித்தது.
கடந்த வருடம் டாடா கம்யூனிகேஷன்ஸ் ரூ.251.02 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் ஈட்டியது. அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த ஒருங்கிணைந்த வருமானம் 6.49% அதிகரித்து ரூ.6,099.75 கோடியாக உள்ளது. இது செப்டம்பர் 2024 காலாண்டில் ரூ.5,727.85 கோடியாக இருந்தது என்றது.
இந்த காலாண்டில் டிஜிட்டல் போர்ட்ஃபோலியோவில் அடைந்த இரட்டை இலக்கு வளர்ச்சியை நாங்கள் தக்க வைத்துள்ளோம். அதே வேளையில் புதிதாக அறிமுகப்படுத்திய வாய்ஸ் ஏஐ மற்றும் கிளவுட் நெட்வொர்க்கிங் ஆகியவற்றில் எங்கள் வாடிக்கையாளருக்கு பிரத்தியேகமான ஆர்வத்தை உருவாக்கி வருவதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எஸ். லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் தரவு வருவாய் ரூ.4,826 கோடியிலிருந்து 7.3 சதவிகிதம் அதிகரித்து ரூ.5,179 கோடியாக இருந்தது. அதே வேளையில், குரல் வழியான தீர்வுகள் மூலம் டாடா கம்யூனிகேஷனின் வருவாய் 4.5 சதவிகிதம் குறைந்து ரூ.405.96 கோடியாக உள்ளது. இதுவே செப்டம்பர் 2024 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.425.48 கோடியாக இருந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.