
புதுதில்லி: ஆதித்யா பிர்லா குழும நிறுவனத்தின் அங்கமாக உள்ள இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட், நிதியாண்டின் 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.8.81 கோடி ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐசிஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, ரூ.2,014 கோடி முதலீட்டை அங்கீகரித்துள்ள நிலையில் நிறுவனத்தை நவீனமயமாக்கலுக்கு ரூ.1,574 கோடி மூலதனமும், திறன் மேம்பாட்டிற்கான ரூ.440 கோடியும் ஒதுக்கியுள்ளது.
கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.339.13 கோடி நிகர இழப்பை சந்தித்ததாக தெரிவித்தது. அதே வேளையில் செயல்பாடுகளிலிருந்து அதன் வருவாய் 9.31 சதவிகிதம் அதிகரித்து நிதியாண்டின் 2-வது காலாண்டில் அது ரூ.1,117.04 கோடியாக உள்ளது என்றது. இதுவே கடந்த வருடம் இதே காலாண்டில் அது ரூ.1,021.84 கோடியாக இருந்தது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.1,135.64 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 13.5% குறைவு. 2-வது காலாண்டில், இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் உள்நாட்டு விற்பனை அளவு 24.4 லட்சம் டன்கள். காலாண்டு அடிப்படையில் இது 11.9% அதிகரிப்பு.
இருப்பினும், நிறுவனத்தின் மொத்த வருமானம் மற்றும் அதன் இதர வருமானத்தையும் சேர்த்து, நிதியாண்டின் 2-வது காலாண்டில் அது 2.94% குறைந்து ரூ.1,146.04 கோடியாக உள்ளது. கூடுதலாக, நவீனமயமாக்கலுக்காக ரூ.1,574 கோடி மூலதன முதலீடை செய்ய வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் ரூ.391.75 ஆக முடிவடைந்தது. இது அதன் முந்தைய முடிவை விட 0.58% சரிவு.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.03 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.