
புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை விற்பனைப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர் லிமிடெட், அதன் மொத்த வருவாயில் 18% அதிகரித்து ரூ.90,018 கோடியாக உள்ளதாக தெரிவித்தது. அதே நேரத்தில் அதன் வரிக்குப் பிந்தைய லாபம் 21.9% அதிகரித்து ரூ.3,457 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது ஒழுங்குமுறை தாக்கலில், 2004-05 ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ.76,302 கோடி மொத்த வருமானத்தையும் ரூ.2,836 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தையும் பதிவு செய்தது என்றது.
செப்டம்பர் வரையான காலாண்டில் ரிலையன்ஸ் ரீடெய்லின் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 19 சதவிகிதம் அதிகரித்து ரூ.79,128 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.66,502 கோடியாக இருந்தது.
2-வது காலாண்டில், ரிலையன்ஸ் சில்லறை விற்பனை வரிக்கு முந்தைய லாபம் ரூ.6,816 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 16.5 சதவிகிதம் அதிகரிப்பு.
பண்டிகை கால கொள்முதல் காரணமாக மளிகை மற்றும் ஃபேஷன் முறை வணிகங்கள் முறையே ஆண்டுக்கு ஆண்டு 23 சதவிகிதம் மற்றும் 22 சதவிகிதம் வளர்ச்சியடைந்தன.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் புதிய வெளியீடுகளால் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் ஆண்டுக்கு ஆண்டு 18 சதவிகித வளர்ச்சி அடைந்ததாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வருவாய் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், பண்டிகை கால தேவை காரணமாக அதன் மளிகை வணிகம் ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டது. அதே வேளையில் அதன் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு வணிகம் 20 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. பிரதான உணவுப் பொருட்கள் 18 சதவிகிதம் உயர்ந்த நிலையில் வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு 13 சதவிகிதம் உயர்ந்ததுள்ளது.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனை அளவு ஆண்டுக்கு ஆண்டு 62 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் அதன் ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை நுகர்வும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்தது.
இதையும் படிக்க: இந்தியா சிமென்ட்ஸ் 2-வது காலாண்டு லாபம் ரூ.8.81 கோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.