கிரிப்டோ சந்தையும் பெரும் பாதிப்பு! 4 மணிநேரத்தில் 128 பில்லியன் டாலர் சரிவு!

கிரிப்டோகரன்சி சந்தையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 230 பில்லியன் டாலர் இழப்பு
கிரிப்டோ சந்தையும் பெரும் பாதிப்பு! 4 மணிநேரத்தில் 128 பில்லியன் டாலர் சரிவு!
Published on
Updated on
1 min read

கிரிப்டோகரன்சி சந்தையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 230 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி மதிப்பானது, எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலரும் இருந்துவந்த நிலையில், சமீபமாக கிரிப்டோ சந்தையிலும் நிலையற்ற தன்மை இருந்து வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் வெறும் 4 மணிநேரங்களில் 128 பில்லியன் டாலர் சரிந்ததுடன், ஒரே நாளில் 230 பில்லியன் டாலர் சரிந்துள்ளது. வியாழக்கிழமையில் இருந்த 3.78 டிரில்லியன் டாலரில் இருந்து, 3.54 டிரில்லியன் டாலராக வெள்ளிக்கிழமையில் சரிவடைந்தது.

2022-ல் நிகழ்ந்த எஃப்டிஎக்ஸ் (FTX) பரிமாற்றத்தின் வீழ்ச்சியையே நேற்றைய சரிவு நினைவூட்டதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

``அமெரிக்கா - சீனா உறவு நிலையற்றதாக இருக்கும்வரையில் கிரிப்டோ சந்தையும் நிலையாக இருக்க முடியாது. மேலும், அடிப்படை நிதி நிலைமைகள் சரியாக இல்லாதபோது, பிட்காயினோ எத்தீரியமோ எதுவானாலும் கிரிப்டோ நாணயங்கள் தங்களின் மதிப்பை நிலைநிறுத்துவதில் சிரமப்படும்’’ என்று அமெரிக்காவை சேர்ந்த வர்த்தகத் துறை இயக்குநர் ஜுவான் பெரெஸ் (Juan Perez) தெரிவித்தார்.

இதையும் படிக்க: 2030-க்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்!

Summary

Fear returns to the crypto market as $230B vanishes overnight

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com