
தீபாவளி நாளான இன்று இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 691 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.
பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை போன்றவை நேர்மறையான குறியீட்டில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. தற்போது 11 மணிநிலவரப்படி, 604.31 புள்ளிகள் உயர்ந்து 84,537.41 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், 11 மணி நிலவரப்படி 163.85 புள்ளிகள் உயர்ந்து 25,877.55 புள்ளிகளாக வணிகம் நடைபெற்று வருகிறது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் 3.45% உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆக்சிஸ் வங்கி 2.45%, பஜாஜ் ஃபின்சர்வ் 2.38%, எஸ்பிஐ 2.17%, இந்தஸ்இந்த் வங்கி 1.88%, பார்தி ஏர்டெல் 1.49%, பஜாஜ் ஃபைனான்ஸ் 1.38% உயர்வுடன் காணப்பட்டன.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் ஐ.டி.எஃப்.சி., சென்ட்ரல் வங்கி, யூகோ வங்கி போன்ற வங்கித் துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
இதையும் படிக்க | செல்போன் செயலிகள் மூலம் கடன் கொடுத்து ஏமாற்றும் கும்பல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.