
இரண்டு நாள்கள் தீபாவளி விடுமுறைக்கு பிறகு வியாழக்கிழமை காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 520.61 புள்ளிகள் உயர்ந்து 84,946.95 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150.35 புள்ளிகள் உயர்ந்து, 26,018.95 புள்ளிகள் என்ற உச்சத்தைப் பெற்றுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக நிஃப்டி 26,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகின்றது.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியைப் பொறுத்தவரை ஐடி, வங்கித் துறைகளின் பங்குகள் லாபத்தைப் பெற்றுள்ளன.
சென்செக்ஸ் பொறுத்தவரை இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனானஸ் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
காலை 9.45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85,190 புள்ளிகளுடனும், நிஃப்டி 26,076 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.