மாதிரிப் படம்
மாதிரிப் படம்

ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 87.86 ஆக நிறைவு!

வணிக நேர முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 87.86 காசுகளாக நிறைவு பெற்றது.
Published on

வணிக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 87.86 காசுகளாக நிறைவு பெற்றது.

அமெரிக்கா - இந்தியா இடையிலான வணிக ஒப்பந்தங்கள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், ரூபாய் மதிப்பு நேர்மறையாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரஷியாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா படிப்படியாக குறைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு ரூபாய் மதிப்பில் எதிரொலித்துள்ளது.

கடந்த திங்கள் கிழமை ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ. 87.93 காசுகளாக இருந்தது. வியாழக் கிழமையான இன்று (அக். 23) வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வணிக நேரத் தொடக்கத்தில் 13 காசுகள் உயர்வுடன் ரூ. 87.80 என ரூபாய் மதிப்பு இருந்தது.

வணிக நேர மத்தியில் ரூ. 87.96 வரை குறைந்தது. பின்னர் வணிக நேர முடிவில் 7 காசுகள் உயர்ந்து ரூ. 87.86 காசுகளாக நிறைவு பெற்றது.

இதையும் படிக்க |பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு: ஐடி பங்குகள் ஏற்றம்!

Summary

Rupee rises 7 paise to close at 87.86 against U.S. dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com