
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு பெற்றன. சென்செக்ஸ் 130 புள்ளிகள், நிஃப்டி 20 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தன. அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3% வரை உயர்ந்தன.
2024 செப்டம்பர் மாதத்தில் இருந்து முதல் முறையாக நிஃப்டி 26,000 புள்ளிகளைக் கடந்து வணிகமானது. மேலும், மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. இதனால் உள்ளூர் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில் 85,154ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து வணிக நேர மத்தியில் 85,290 என்ற உச்சத்தை எட்டியது. பிற்பாதியில் சற்று சரிவைக் கண்டாலும், வணிக நேர முடிவில் 130.05 உயர்ந்து 84,556.40 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
20 நிறுவனப் பங்குகள் ஏற்றம்
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 20 நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 10 நிறுவனங்கள் மட்டுமே சரிவைக் கண்டன.
அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் பங்குகள் 3.82% வரை உயர்ந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக எச்.சி.எல். 2.56%, டிசிஎஸ் 2.22%, ஆக்சிஸ் வங்கி 1.74%, கோட்டாக் வங்கி 1.31%, டைட்டன் கம்பெனி 1.17%, டெக் மஹிந்திரா 1.02% உயர்ந்திருந்தன.
இதேபோன்று ஈடர்னல் நிறுவனப் பங்குகள் -2.89% சரிந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் -1.75%, அல்ட்ராடெக் சிமென்ட் -1.60%, அதானி போர்ட்ஸ் -1.39% சரிந்திருந்தன.
நிஃப்டி நிலவரம்
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, வணிக நேரத் தொடக்கத்தில் 26,057 ஆக இருந்தது. வணிக நேர மத்தியில் அதிகபட்சமாக 26,104 புள்ளிகள் வரை உயர்ந்தது. இது, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத ஏற்றமாகும். பின்னர் படிப்படியாகக் குறைந்து 25,862 புள்ளிகளாக வணிகமானது. வணிக நேர முடிவில் 20 புள்ளிகள் உயர்ந்து 25,888 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.
நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் 50 தரப் பங்குகளில் இன்ஃபோசிஸ் 3.82%, எச்.சி.எல். டெக் 2.56%, டிசிஎஸ் 2.22%, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் 2.08%, ஆக்சிஸ் வங்கி 1.74%, ஓஎன்ஜிசி 1.69%, கோட்டாக் வங்கி 1.31%, விப்ரோ 1.22%, டெக் மஹிந்திரா 1.02%, டாடா மோட்டார்ஸ் 1.00% உயர்ந்திருந்தன.
அதிகபட்சமாக எய்ச்சர் மோட்டார்ஸ் -1.91%, பார்தி ஏர்டெல் -1.75%, அல்ட்ராடெக் சிமென்ட் -1.60%, ஐசிஐசிஐ வங்கி -1.33%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் -1.25%, டாடா கன்சியூமர்ஸ் -1.16% சரிந்திருந்தன.
இதையும் படிக்க | இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஐஃபோன் 17 ப்ரோ! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.