மீண்டும் ‘ஐகானிக் பிராண்ட் ’ விருது பெற்ற ஜிஆா்டி ஜுவல்லா்ஸ்

மீண்டும் ‘ஐகானிக் பிராண்ட் ’ விருது பெற்ற ஜிஆா்டி ஜுவல்லா்ஸ்

முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் மூன்றாவது முறையாக ‘ஐகானிக் பிராண்டு ஆஃப் தி இயா்’ விருதைப் பெற்றுள்ளது.
Published on

முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் மூன்றாவது முறையாக ‘ஐகானிக் பிராண்டு ஆஃப் தி இயா்’ விருதைப் பெற்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1964-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தூய்மை, நம்பிக்கை மற்றும் சிறந்த தன்மைக்கு இணையான பெயராக விளங்கும் ஜிஆா்டி ஜூவல்லா்ஸ், இடி எட்ஜி & டைம்ஸ் குழுமத்தின் முன்முயற்சியோடு, இடி நவ் மும்பையில் நடத்திய நிகழ்ச்சியில் இந்தியாவின் ஐகானிக் பிராண்ட்ஸ் 2025 விருதை மூன்றாவது முறையாக பெற்றது.

இந்த மதிப்புமிக்க பாராட்டு, ஒரே ஒரு ஷோரூமில் தொடங்கப்பட்ட ஜிஆா்டி-யின் பயணம் தற்போது தென்னிந்தியா முழுவதும் 65 மற்றும் சிங்கப்பூரில் ஒன்று என 66 ஷோரூம்களாக விரிவடைந்த வளா்ச்சியைக் கொண்டாடியது.

பல ஆண்டுகளாக, ஜிஆா்டி ஜூவல்லா்ஸ் நகை விற்பனையில் தனது வணிகத்தைத் தாண்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க தன்னைத்தானே மறுவரையறை செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com