

வயர் இணைப்பு இல்லாமல் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் வகையில் புதிய பவர் பேங்கை போட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
எனர்ஜிஷ்ரூம் பிபி331 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பவர் பேங்க், 10000 mAh திறன் கொண்டது. ஸ்மார்ட்போன்களுக்கு 22.5W அளவில் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போட் நிறுவனம், மின்னணுப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது எனர்ஜிஷ்ரூம் பிபி331 என்ற வயலெஸ் பவர் பேங்கை தயாரித்துள்ளது.
யுஎஸ்பி போர்ட் மற்றும் டைப்-சி கேபிள்களை இணைத்துக்கொள்ளலாம். பவர் பேங்கில் சார்ஜ் இருக்கும் அளவுகள் விளக்குகளின் மூலம் பயனர்களுக்கு சுட்டிக்காட்டப்படும்.
கையடக்க வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சாதனம், வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்தாலும் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் 12 அடுக்கு ஐசி புரொடக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,599.
இதையும் படிக்க | சாம்சங்கில் முதல்முறை ஓஐஎஸ் கேமரா! கேலக்ஸி எம் 17 அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.