

ஸெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய புளுடூத் ஸ்பீக்கர் நிறைவான அம்சங்களுடன் வெளியாகியுள்ளது.
ஸெப்- பட்டி 100 (ZEB-Buddy 100) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புளுடூத் ஸ்பீக்கர், ஒலிக்கு ஏற்ப வண்ண விளக்குகளை ஒளிரச் செய்யும் அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், பாடல்கள் கேட்கும்போது வண்ண விளக்குகளே அதிர்வுகளை காட்சிகளாக உணரச் செய்யும்.
வி.5.0 புளுடூத் இணைப்பில் செயல்படும். இதனால், ஒவ்வொரு முறையும் எளிதில் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்துவிடும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, மடிக்கணினி, கையடக்கக் கணினி, கணினி ஆகியவற்றுடனும் இணைத்துக்கொள்ளலாம்.
10.16 செ.மீ. விட்டமுடைய ஸ்பீக்கர்கள் கொண்டது. இதனால், அதிக ஒலியை அனுபவிக்கலாம். இதனுடன் மைக்கும் கொடுக்கப்படுகிறது.
15 W திறனுடைய ஒலிப்பெருக்கிகள் கொண்டது. பிளுடூத் இணைக்கப்படாத நேரத்தில், நேரடியாக ரேடியோவாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஸ்பீகரில் பிடிப்பான் கொடுக்கப்பட்டுள்ளதால், சுமந்து செல்வது எளிது. ஸ்மார்ட்போன் ஹோல்டரும் உள்ளதால், ஸ்மார்ட்போனை ஸ்பீக்கரிலேயே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
புளுடூத் மட்டுமின்றி நினைவக அட்டை, யூஎஸ்பி, மைக் ஆகியவற்றுடனும் இணைத்துக்கொள்ளலாம். ஒருமூறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் (50% ஒலி அளவில்) பாடல்கள் கேட்கலாம்.
இதையும் படிக்க | சாம்சங்கில் முதல்முறை ஓஐஎஸ் கேமரா! கேலக்ஸி எம் 17 அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.