

மும்பை: பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா, செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 8% சரிந்து ரூ.4,809 கோடியாக உள்ளது என்றது.
பொதுத்துறை வங்கியின் முக்கிய நிகர வட்டி வருமானம் 2.7% அதிகரித்து ரூ.11,954 கோடியாக உள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 3.11% இருந்தது.
மொத்த வருமானமும் 2-வது காலாண்டில் ரூ.35,026 கோடியாகக் குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.35,445 கோடியாக இருந்தது.
செப்டம்பர் வரையான மாத இறுதியில் மொத்த செயல்படாத சொத்து விகிதம் 2.16% மேம்பட்டது. இது மூன்று மாதங்களுக்கு முன்பு 2.28% இருந்தது.
ஜூன் வரையான காலாண்டில் 2.91% இருந்த என்ஐஎம் - தொடர்ச்சியான கண்ணோட்டத்தில் அதிகரிக்க முடிந்ததாக அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான சந்த் தெரிவித்தார்.
வட்டி அல்லாத வருமானம் ஆண்டுக்கு 32% குறைந்து ரூ.3,515 கோடியாக உள்ளது. செப்டம்பர் 22 அன்று ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு வங்கியின் வாகனக் கடன் வழங்கல் 25% வளர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பிஎஸ்இ-யில் பாங்க் ஆஃப் பரோடா பங்குகள் 2.05% உயர்ந்து ரூ.278.30 ஆக முடிவடைந்தன.
இதையும் படிக்க: பிபிசிஎல் நிகர லாபம் 169% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.