

நேற்று(வியாழன்) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்றும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,379.79 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 329.38 புள்ளிகள் குறைந்து 84,067.97 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.35 புள்ளிகள் குறைந்து 25,771.50 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, டிசிஎஸ், டைட்டன், பாரத் எலக்ட்ரானிஸ் அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களில் அடங்கும்.
அதேநேரத்தில் என்டிபிசி, மேக்ஸ், சிப்லா, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பதற்றம் தணிந்த நிலையிலும் பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடைய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறை ரீதியாக, உலோகம், சுகாதாரத் துறை, ஊடகம், வங்கி, மருந்துத் துறைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
எனினும் பொதுத்துறை வங்கிகள், ஆட்டோ பங்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.