2,900 இ-விடாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி!

மாருதி சுசூகி இந்தியா தனது மின்சார வாகனமான இ-விடாராவின் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளதாகக் தெரிவித்தது.
2,900 இ-விடாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: மாருதி சுசூகி இந்தியா தனது மின்சார வாகனமான இ-விடாராவின் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் கடந்த மாதம் 2,900 கார்களுக்கு மேல் ஏற்றுமதி செய்தது.

குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்திலிருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட 12 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த கார்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 26 அன்று, குஜராத் தொழிற்சாலையிலிருந்து முதல் இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கார் உற்பத்தியானது ஹன்சல்பூர் ஆலையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது.

ஐரோப்பாவிற்கு இ-விடாரா ஏற்றுமதி தொடங்குவது உண்மையில் எங்களுக்கு ஒரு பெருமைமிக்க மற்றும் வரையறுக்கப்பட்ட தருணம் என்றார் மாருதி சுசூகி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி.

இந்த மாடலை 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என்றார்.

ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசூகியின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 சதவிகிதம் அதிகரித்து 36,538ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 26,003 ஆக இருந்தது.

இதையும் படிக்க: குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி

Summary

Maruti Suzuki India said it has commenced shipment of its battery electric vehicle e VITARA, having dispatched over 2,900 units last month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com