
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு.

கோப்புப் படம்
மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு.
அமெரிக்க வர்த்தக கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு சாய்ந்திருப்பதால், ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் சரிந்து வர்த்தகம் ஆவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அந்நிய நிதி வெளியேற்றம் அல்லது டாலர் வலிமை பெறுவதும், இந்திய ரூபாய் மேலும் பலவீனமடை செய்யும் என்றனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.14 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.20 ஐ தொட்ட நிலையில், முடிவில் 8 காசுகள் சரிந்து ரூ.88.18-ஆக முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





