நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 206.61 புள்ளிகள் சரிந்து 80,157.88 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 45.45 புள்ளிகள் சரிந்து 24,579.60 ஆக நிலைபெற்றது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

மும்பை: புது தில்லியில் செப். 3, 4 தேதிகளில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய பங்குச் சந்தை வங்கி, ஆட்டோ பங்குகளில் கடைசி சில மணி நேர முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டிய நிலையில், சென்செக்ஸ் 206.61 புள்ளிகள் சரிந்து முடிவடைந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் உயர்ந்து தொடங்கிய பங்குச் சந்தை, பிற்பகல் வரை லாபத்துடன் வர்த்தகமானது. பகலில், அதிகபட்சமாக 24,756.10 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 24,522.35 புள்ளிகளையும் எட்டியது.

முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 206.61 புள்ளிகள் சரிந்து 80,157.88 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 45.45 புள்ளிகள் சரிந்து 24,579.60 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்தும் பவர் கிரிட், என்டிபிசி, டாடா ஸ்டீல் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைச் சுற்றியுள்ள நேர்மறையான உள்நாட்டு குறிப்புகள் மற்றும் நம்பிக்கையின் பெயரில் சந்தைகள் உறுதியான குறிப்பில் அமர்வைத் தொடங்கிய நிலையில், ஆரம்ப ஏற்றத்திற்குப் பிறகு, முதல் பாதியில் நிஃப்டி படிப்படியாக உயர்ந்தது. இருப்பினும் பிந்தைய பாதியில் வங்கி மற்றும் ஹெவிவெயிட் நிறுவனங்களில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக சந்தை தடம் புரண்டது.

ஜிஎஸ்டி கவுன்சில் செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு புதுதில்லியில் கூடி, முன்மொழியப்பட்ட விகிதங்களைக் குறைப்பது குறித்து விவாதிக்க உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்ததால், உள்நாட்டு பங்குச் சந்தைகள் வலுவான மேக்ரோ தரவுகள் இருந்தும் லாப முன்பதிவால் சரிந்தன.

பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 0.64 சதவிகிதம் உயர்ந்தது, மிட்கேப் குறியீடு 0.27 சதவிகிதம் உயர்ந்தது.

பிஎஸ்இ-யில் துறை வாரியாக, வங்கி 0.68 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தும், அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு 0.59 சதவிகிதமும், நிதி சேவைகள் 0.44 சதவிகிதமும், டெக் 0.28 சதவிகிதம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் 0.13 சதவிகிதம் சரிந்தன முடிவடைந்தன.

அதே வேளையில் மின்சாரம் 1.62 சதவிகிதம் உயர்ந்த நிலையில் அதைத் தொடர்ந்து பயன்பாட்டுப் பொருட்கள் 1.47 சதவிகிதமும், எஃப்எம்சிஜி 1.12 சதவிகிதமும், உலோகம் 0.90 சதவிகிதமும், ரியல் எஸ்டேட் 0.67 சதவிகிதம் மற்றும் எரிசக்தி 0.65 சதவிகிதமும் சரிந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு உயர்ந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்ப சந்தைகள் சரிந்த நிலையில், தொழிலாளர் தின விடுமுறைக்காக அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) மூடப்பட்டது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.72 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 69.36 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: சுசூகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதம் 9% அதிகரிப்பு!

Summary

Reversing its early gains, benchmark BSE Sensex declined by 206 points due to last-hour profit-taking in banking and auto shares amid caution ahead of the GST Council meeting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com