
பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் தற்போது சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,295.99 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 16.75 புள்ளிகள் குறைந்து 80,147.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 5.05 புள்ளிகள் உயர்ந்து 24,585.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன் கம்பெனி, சிப்லா, இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
இன்ஃபோசிஸ், ஹெச்டிஎப்சி லைஃப், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.
துறை ரீதியாக, நிஃப்டி மெட்டல், பார்மா, தனியார் வங்கி பங்குகள் ஏற்றமடைந்த நிலையில் ஐடி துறை பங்குகள் சரிவடைந்தன.
அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இந்தியாவில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் எதிரொலிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.