டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் பற்றி...
டிவிஎஸ் என்டார்க் 150
டிவிஎஸ் என்டார்க் 150Photo | TVS Motor Website
Published on
Updated on
1 min read

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் மிகவும் பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ள என்டார்க் 150 இன் விலை, வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததைவிட சற்று குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்டாக வெளியாகி இருக்கும் என்டார்க் 150 ஸ்கூட்டரின் என்ஜின் 149.7 சிசி, சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர் கூலண்ட்டுடன் சந்தைக்கு வந்துள்ளது.

இதன் என்ஜினானது, 7,000 ஆர்பிஎம்மில் மணிக்கு 13 குதிரைத் திறனும், 5,500 ஆர்பிஎம்மில் 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிவிடி ஆட்டோமெடிக் கியர் பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 104 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும், 6.3 நொடிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் எனவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருக்கைக்கு அடியில் 12 லிட்டர் சேமிப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் முகப்புப் பக்க விளக்குகள் காண்பவர்களை ஈர்க்கும் வகையில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலான என்டார்க் 125 ஸ்கூட்டரை ஒப்பிடும்போது டிசைனில் பல மாற்றங்களை டிவிஎஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

என்டார்க் 150 ஸ்கூட்டரில் டிஎஃப்டி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேரியண்ட்டில், மியூசிக் கண்ட்ரோல், நேவிகேஷன், 4 ஜி சிம் கனெக்டிவிட்டி, ஸ்மார்ட் வாட்ச் இண்டகிரேஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ப்ளூடூத் மூலம் டிஸ்பிளே வழியாக அழைப்பை எடுக்கவும் துண்டிக்கவும் முடியும்.

டர்போ ப்ளூ, ஸ்டெல்த் சில்வர், ரேசிங் ரெட் மற்றும் நைட்ரோ கிரீன் ஆகிய நான்கு நிறங்களில் என்டார்க் 150 விற்பனைக்கு வந்துள்ளது.

என்டார்க் 150 ஸ்கூட்டரின் எக்ஸ் சோரூம் விலை ரூ. 1.19 லட்சமாகவும், என்டார்க் 150 டிஎஃப்டி-யின் விலை ரூ. 1.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TVS Ntorq 150 scooter launched

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com