இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் பைக் அறிமுகம்! ரூ.12.99 லட்சத்தில்..!

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
இந்திய மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட்.
இந்திய மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட்.
Published on
Updated on
1 min read

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் லைன் - அப் பைக் வரிசைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகள் 8 விதமான மாடல்களில் வெளியாகியுள்ளன.

100 க்கும் மேற்பட்ட அக்ஸசரிஸ்களுடன், 3 விதமான ரிம் லெவல்கள் கொண்டு எக்ஸ் ஷோரூம் விலை ரூ.12.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கவுட் சிக்ஸ்டி கிளாசிக், ஸ்கவுட் சிக்ஸ்டி பாப்பர், ஸ்கவுட் சிக்ஸ்டி, ஸ்கவுட் கிளாசிக், ஸ்கவுட் பாப்பர், ஸ்போர்ட் ஸ்கவுட், சூப்பர் ஸ்கவுட் மற்றும் ஃபிளாக்‌ஷிப் 101 ஸ்கவுட் ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அனைத்து பைக்குகளிலும், ஸ்பீட் பிளஸ் 1250 வி-டுவின் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 105 குதிரைத்திறனையும், 109 nm திறனையும் வெளிப்படுத்தும் 999 சிசி என்ஜின் உள்ளது.

13 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் மற்றும் 25 கி.மீ. வரை மைலேஜ் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

680 மில்லிமீட்டர் உயரம் கொண்ட மிகவும் தாழ்வான இருக்கை அமைப்பு, லைட் வெயிட்டான வண்டியின் அடித்தளம் ஆகியவை வண்டி ஓட்டுபவருக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றன.

இந்திய மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் பைக் விலை!

  • ஸ்கவுட் சிக்ஸ்டி கிளாசிக் - ரூ. 14.02 லட்சம்

  • ஸ்கவுட் சிக்ஸ்டி பாப்பர் - ரூ. 12.99 லட்சம்

  • ஸ்கவுட் சிக்ஸ்டி லிமிடெட் - ரூ. 13.42 லட்சம்

  • ஸ்கவுட் கிளாசிக் - ரூ. 14.02 லட்சம்

  • ஸ்கவுட் பாப்பர் - ரூ. 13.99 லட்சம்

  • ஸ்போர்ட் ஸ்கவுட் - ரூ. 14.09 லட்சம்

  • சூப்பர் ஸ்கவுட் - ரூ. 16.15 லட்சம்

  • 101 ஸ்கவுட் - ரூ. 15.99 லட்சம்

Summary

Indian Motorcycle Scout Lineup Launched In India, Starting At Rs 12.99 Lakh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com