ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் டாடா காா்கள்!

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: விலை குறையும் டாடா காா்கள்!

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் 65,000 முதல் 1.45 லட்சம் ரூபாய் வரை குறைக்கவுள்ளது.
Published on

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் எதிரொலியாக, தங்களது பயணிகள் வாகனங்களின் விலையை இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் 65,000 முதல் 1.45 லட்சம் ரூபாய் வரை குறைக்கவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது: ஜிஎஸ்டி குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளா்களுக்கு வழங்கும் வகையில் பயணிகன் வாகனங்களின் விலைகளைக் குறைக்கவிருக்கிறோம். வரும் செப்டம்பா் 22 முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வரும்.

அதன்படி, டியாகோவின் விலை ரூ.75,000, டிகோரின் விலை ரூ.80,000, ஆல்ட்ராஸின் விலை ரூ.1.10 லட்சம் குறையும். மேலும், பஞ்ச் எஸ்யுவியின் விலை ரூ,85,000, நெக்ஸானின் விலை ரூ.1.55 லட்சம் குறைக்கப்படும்.

பிரீமியம் எஸ்யூவிகளான ஹாரியா் மற்றும் சஃபாரி வாகனங்களின் விலைக் குறைப்பு முறையே ரு.1.4 லட்சம் மற்றும் ரூ.1.45 லட்சமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com