
புதுதில்லி: சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, தேவை மீட்சியடையும் என்ற நம்பிக்கையால் ஆட்டோ பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
பாரத் ஃபோர்ஜ் பங்குகள் 5.73 சதவிகிதமும், அசோக் லேலேண்ட் 4.85 சதவிகிதமும், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் 4.22 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 3.97 சதவிகிதமும், பஜாஜ் ஆட்டோ 3.97 சதவிகிதமும் உயர்ந்தன.
அதே வேளையில் மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் 3.96 சதவிகிதமும், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் 3.62 சதவிகிதமும், ஐஷர் மோட்டார்ஸ் 3.32 சதவிகிதமும், டிவிஎஸ் மோட்டார் 3.25 சதவிகிதமும், சோனா பிஎல்டபிள்யூ பிரிசிஷன் ஃபோர்ஜிங்ஸ் 3.16 சதவிகிதமும், மாருதி சுசுகி இந்தியா 2.32 சதவிகிதமும், போஷ் 1.31 சதவிகிதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.26 சதவிகிதம் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா 0.42 சதவிகிதம் வரை அதன் பங்குகள் உயர்ந்தன.
பிஎஸ்இ ஆட்டோ குறியீடு 3.12 சதவிகிதம் உயர்ந்து 60,719.93 ஆக உயர்ந்தது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளைத் தொடர்ந்து, தேவை மீட்சியடையும் என்ற எதிர்பார்ப்புகளால் ஆட்டோ மற்றும் அதன் துணைப் பங்குகள் உயர்ந்தன.
செப்டம்பர் 22 ஆம் தேதிக்குப் பிறகு புதிய விகிதங்கள் அமலுக்கு வரும் போது தேவை அதிகரிக்கும். ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளால், குறிப்பாக ஆட்டோக்கள் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, மஹிந்திரா & மஹிந்திரா சனிக்கிழமை தனது பயணிகள் வாகன வரம்பின் விலையை ரூ.1.56 லட்சம் வரை குறைத்துள்ளதாக தெரிவித்தது.
செப்டம்பர் 3 ஆம் தேதி அன்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மும்பையை தளமாகக் கொண்ட ஆட்டோ நிறுவனம் தெரிவித்தது.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு காரணமாக டாடா மோட்டார்ஸ் மற்றும் ரெனால்ட் இந்தியாவும் வாகன விலைகளைக் குறைத்துள்ளன.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.