ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் நாளை (செப். 9) இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.
iPhone 17 Air
ஐபோன் 17 ஏர்படம் / நன்றி - ஐபோன்
Published on
Updated on
1 min read

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் நாளை (செப். 9) இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

ஐபோன் 17 வரிசையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து இணையத்தில் பல்வேறு விதமான தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

இதனிடையே மிகவும் மெலிதாக 5.5 மி.மீ தடிமன், A19 சிப்செட், மோஷன் ப்ரோ தொடுதிரை போன்றவை இதன் சிறப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனுடன் ஆப்பிள் நிறுவனத்தின் இன்ன பிற தயாரிப்புகளும் அறிமுகமாகின்றன.

தொழில்நுட்பப் பிரியர்களுக்கு மட்டுமின்றி, சாதாரணமாகப் பயன்படுத்துவோரையும் ஐபோன் 17 ஏர் கவர்ந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • இந்திய நேரப்படி நாளை (செப். 9) இரவு 10.30 மணி முதல் ஐபோன் 17 ஏர் வெளியீடு நேரலை செய்யப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் நேரலையைக் காணலாம். மேலும், ஆப்பிள் டிவி வைத்துள்ளவர்கள் அதிலும் நேரலை பார்க்கலாம்.

  • அமெரிக்காவில் 899 டாலர்களுக்கு விற்கப்படுகிறது. இந்திய சந்தையில் இறக்குமதி வரி உள்பட ரூ. 89,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 5.5 மி.மீ தடிமன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இதற்கு முன்பு வெளியான ஐபோன்களின் தடிமனை விட குறைவாகும்.

  • வட்டமாக அல்லாமல், நீள்வட்ட (டியூப் மாத்திரை) வடிவிலான கேமரா வடிவமைப்பு கொண்டது.

  • சாம்சங் நிறுவனத்தில் உள்ளதைப் போன்று 6.6 அங்குல ஓஎல்இடி திரை கொண்டது. முந்தைய மாடல்களை விட 30% அதிக பிரகாசத்தை வழங்கும்.

  • தொடுதிரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

  • டைட்டானியம் - அலுமினியம் உலோகத்தாலான புற வடிவமைப்பு கொண்டிருக்கும். இதன் எடை 145 கிராம்.

  • A19 சிப்செட் மற்றும் சேம்பர் கூலிங் தொழில்நுட்பம் உடையதாக இருக்கும்.

  • ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போனுக்கு 2,800mAh பேட்டரி திறன் இருக்கும். வயல் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.

  • பின்புறம் 48MP கேமராவும் முன்பக்கம் 24MP கேமராவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க |இந்தியாவில் 79 ஆயிரம் கோடிக்கு ஐபோன் விற்பனை! டிம் குக்கிடம் கொந்தளித்த டிரம்ப்!

Summary

iPhone 17 Air Launch Tomorrow: Shockingly Slim 5.5mm Design, 48MP Camera, and Expected India Price

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com