
கொல்கத்தா: உஷா ஸ்ரீராம் தனது பிரீமியம் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பிராண்டான அக்வேரோ-வை அறிமுகப்படுத்துவதன் மூலம் எஃப்எம்சிஜி பிரிவில் நுழைவதாக அறிவித்துள்ளது.
அதன் ஐபிஓ-வை பரிசீலிப்பதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளில் அதன் விற்பனையை ரூ.1,000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்வேரோ எங்களுடைய மூன்றாவது பிராண்டாகும் என்றார் உஷா ஸ்ரீராம் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சத்னம் சிங் சந்து.
இந்தியாவில் பேக்கேஜ் செய்யப்பட்ட நீர் தொழில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்புடையது என்றும், அதில் 60 முதல்70 சதவிகிதம் வரை ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது என்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதில் அக்வேரோ வலுவான பங்கை வகிக்கும். தற்போது மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவையை அதிகரிக்கும் என்றார்.
உஷா ஸ்ரீராம் மண்டல மேலாளர் (கிழக்கு) ராஜர்ஷி தே, இந்த பிராண்ட் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
உஷா ஸ்ரீராம் மண்டல மேலாளர் ராஜர்ஷி கூறுகையில், இந்த பிராண்ட் மற்ற கிழக்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.
எஃப்எம்சிஜி துறையில் மேலும் விரிவடைவதற்கான ஒரு திட்டத்தையும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. விரைவில் ஆட்டா, பருப்பு வகைகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் உள்ளிட்ட கூடுதல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்போம்.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.